shadow

Havildar-Mohan-Kumarகடந்த மே மாதம் 28ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கோவையை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். அவருடைய உடல் நேற்று ராணுவ மரியாதையுடன் கோவையில் அடக்கம் செய்யப்பட்டது. வீரமரணம் அடைந்த கோவை ராணுவ வீரரின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 வழங்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த 29 ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் அதிரடி தாக்குதலை எதிர்த்து போரிட்ட இந்திய ராணுவ வீரர்களில் கோவையை சேர்ந்த மோகன்குமார், தீவிரவாதிகளின் குண்டுகளுக்கு இரையானார். அவருடைய உடல் கோவையில் உள்ள அவரது வீட்டிற்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டது.

வீரமரணம் அடைந்த மோகன்குமாரின் உடலுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தின் கமாண்டர் பிரிகேடியர் சுரேஷ் குமார் மற்றும் கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் 42 குண்டுகள் முழங்கள் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சென்னையை சேர்ந்த முகுந்த் வரதராஜன் வீரமரணம் அடைந்த அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் மேலும் ஒரு தமிழக வீரர் பலியானதாது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரணமடைந்த மோகன்குமாருக்கு பானுமதி என்ற மனைவியும், ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளனர்

Leave a Reply