shadow

mayorகோவை மாநகராட்சியின் மேயராகவும், கோவை மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்த வேலுச்சாமி திடீரென அதிமுகவில் உள்ள அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விடுவிக்கப்பட்டதால், அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான செல்வி ஜெயலலிதா நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில், கோவை மேயரும், கோவை மாவட்ட செயலாளருமான வேலுச்சாமி, அதிமுகவில் வகித்து வந்த அனைத்து பொறுபுகளில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக தெரிவித்தார்.

அதிமுக தலைமையின் அதிரடி முடிவை அடுத்து வேலுசாமி நேற்று இரவே தனது ராஜினாமா கடிதத்தை கோவை மாநகராட்சி ஆணையர் லதாவிடம் கொடுத்துவிட்டார். அவருடைய ராஜினாமா கடிதத்தின் நகல் துணை மேயர் லீலாவதிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மேயரின் ராஜினாமாவை தொடர்ந்து துணை மேயர் அவருடைய பொறுப்புகளை கவனிப்பார் என கூறப்படுகிறது.

Leave a Reply