shadow

பாராசூட் விளையாட்டில் தவறி விழுந்து கோவை தொழிலதிபர் பரிதாப பலி

kovaiகோவையில் பாராசூட் விளையாட்டில் ஈடுபட்டிருந்த தொழிலதிபர் ஒருவர் பரிதாபமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வெள்ளி விழாவினை முன்னிட்டு, இந்தியன் ஏரோ ஸ்போர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பின் சார்பில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாரா சைலிங் எனும் சாகச நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தமிழக கடலோரப்படை டி.ஜி.பி. சைலேந்திர பாபு துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பாரா சைலிங்கில் ஆர்வம் கொண்ட பலர் பங்கேற்று வந்த நிலையில் நேற்று காலை கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்த 53 வயது மல்லேஸ்வர ராவ் என்ற தொழிலதிபர், பாரா சைலிங் சாகச நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். பாராசூட்டில் சுமார் 60 அடி உயரத்தில் மல்லேஸ்வர ராவ் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பாராசூட்டில் பொருத்தப்பட்ட பெல்ட், சரியாக பொருத்தப்படாமல் இருந்ததால் தான் அவர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

பாராசூட்டில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த மல்லேஸ்வர ராவ் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply