shadow

Cock_fighting

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்து ஒருவாரம் கூட முடியாத நிலையில் தற்போது சேவல் சண்டைக்கும் தடை விதிக்க வேண்டும் என அகில இந்திய மிருக வதை எதிர்ப்பு இயக்கம் கூறியுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித் து மிருகவதை எதிர்ப்பு இயக்கத்தின் இயக்குனர் மணிலால் கூறியிருப்பதாவது:

ஜல்லிக்கட்டு மூலம் மாடுகள் காயமடைவதைப் போல சேவல் சண்டை நடத்துவதால் சேவல்களுக்கும் காயம் அடைகின்றன. சில சமயங்களில் உயிர் இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது போல சேவல் சண்டை உள்பட மிருகங்களை வதைக்கும் அனைத்து வகை விளையாட்டுக்களையும் தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட் மாநில அரசுகளுக்கு பிறப்பித்த உத்தரவில் மிருகங்கள், பறவைகள் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் சித்ரவதை செய்யப்படுவதை தடுக்கும் கடமை உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவு சேவல் சண்டைக்கும் பொருந்தும். எனவே சேவல் சண்டைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ள அவர், மேலும் சர்க்கஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் யானை, குதிரை, போன்ற மிருகங்கள் துன்புறுத்தப்படுகிறன. இதற்கும் சுப்ரீம் கோர்ட் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply