shadow

download

கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டு வரும் ‘கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட்’ கப்பல் தளத்தில் காலியாக உள்ள 276  உதவி பொறியாளர், உதவி கேட்டரிங், கணக்காளர், டெக்னிக்கல் உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 276

பணிகள்: அசிஸ்டன்ட் பொறியாளர், அசிஸ்டன்ட் கேட்டரிங், அக்கவுண்டன்ட், ஒர்க்மேன், டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஸ்டெனோகிராபர்

வயது வரம்பு: 29.02.2016 தேதியின்படி அசிஸ்டன்ட் பொறியாளர், அசிஸ்டன்ட் கேட்டரிங் பணியிடங்களுக்கு 40க்குள்ளும், இதர அநைத்து பணிகளுக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ,, வேதியியல் துறையில் பட்டம், ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி, அப்ளைடு நியூட்ரீசியன், எம்.காம், சி.ஏ. முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் விரிவான விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதள விளம்பரத்தை பார்க்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, செய்முறைத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் உடல்தகுதி தேர்வின் மூலம் தகுதியைானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை டி.டி.யாக எடுத்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.02.2016

ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் கட்டணம் செலுத்தியதற்கான டி.டி. இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 05.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cochinshipyard.com   என்ற இணையதளத்த்தை பார்க்கவும்.

 

Leave a Reply