shadow

கோ ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்திய ‘லிகோ’ சட்டைகளுக்கு மாபெரும் வரவேற்பு
cooptex
வரும் தீபாவளி திருநாளுக்கு தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதுப்புது டிசைன்களில் ஆடைகளை இறக்குமதி செய்து கொண்டிருக்கும் நிலையில் தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக கோ ஆப்டெக்ஸ் நிறுவனமும் லிக்கோ என்ற புதிய வகை காட்டன் சட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சட்டைகளுக்கு இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் சட்டைகளை தயாரித்து வெற்றிகண்ட தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு அமைப்பான கோ- ஆப்டெக்ஸ், தற்போது ஆண்களுக்கான லிக்கோ என்ற புதிய வகை கைத்தறி சட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்துப் கருத்து கூறிய நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ், “கைத்தறி சட்டைகளுக்குத் தேவையான நூல், உள்நாட்டுக் கைத்தறி நூல் உற்பத்தி மையங்களிடம் இருந்து பெறப்படுகிறது. நம்பிக்கையான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து சிறந்த, தரமான கைத்தறி நூல்கள் பெறப்படுகின்றன. அதிலிருந்து ரெடிமேட் சட்டைகளை உருவாக்கத் தொடங்கியிருக்கிறோம்.

இவை சணல், நார் மூலம் உருவாக்கப்படும் கைத்தறி ஆடைகள், பருத்தி மூலம் உருவாக்கப்படும் கைத்தறி ஆடைகள் என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. முழுமையான கைத்தறி ஆடைகள் சுமார் 1,200 முதல் 1,400 ரூபாய் வரை, நான்கு விதமான அளவுகளில், ஆறு வண்ணங்களில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. காட்டன் கலந்த கைத்தறி ஆடைகள் 10 வண்ணங்களில், 800 முதல் 1000 ரூபாய் வரையில் விற்கப்படுகின்றன. அனைத்து வகையான சட்டைகளும் இந்தியா முழுக்க உள்ள அனைத்து கோ- ஆப்டெக்ஸ் ஷோரூம்களிலும் கிடைக்கும்” என்றார்.

English Summary: Co- Optex introduced a new type shirt.

Leave a Reply