shadow

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவிற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன் இயக்குனர் ஸ்ரீதர் அவர்களால் திரையுலகில் அறிமுகமாகி பைரவி தங்கப்பதக்கம் உள்ளிட்ட மறக்க முடியாத பல திரைப்படங்களில் ஸ்ரீகாந்த் அவர்கள் நடித்துள்ளார்.

கதாநாயகனாக மட்டுமின்றி அனைத்து வகையான பாத்திரங்களிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞராக அவர் திகழ்ந்துள்ளார். எங்கள் இல்லத்தின் அருகே வசித்தவர் என்பதால் தனிப்பட்ட முறையிலும் அவரை நான் நன்கு அறிவேன். பலமுறை அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பினையும் பெற்றுள்ளேன்.

திரு ஸ்ரீகாந்த் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.