shadow

உத்தரகண்ட் மாநிலத்திற்கு வாருங்கள். ஜெயலலிதாவுக்கு முதல்வர் அழைப்பு

tiruvalluvarfஉத்தரகண்ட் மாநிலத்தில் சமீபத்தில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது உ.பி மாநில அரசு திருவள்ளுவர் சிலை அமைப்பதில் உறுதியாக உள்ளதாக அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார். மேலும் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் இடத்திற்கு வருகை தருமாறு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து உத்தரகண்ட்  மாநில அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

திருவள்ளுவர் சிலையை உத்தரகண்ட்டில் நிறுவுவதில் அரசு உறுதியாக இருக்கின்றது.. திருவள்ளுவர் உலக சமூகத்திற்கும், குறிப்பாக இந்திய மக்களுக்கும் எப்போதும் உத்வேகம் அளிக்கக் கூடியவர். அவருடைய சிலையை உத்தரகண்டின் ஹரித்வாரில் உள்ள மேலா பவனில் நிறுவுவதை கவுரமாக நினைக்கின்றோம். திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் ஹரித்வார் புனித யாத்திரையில் முக்கிய இடமாக திகழும்.

மேலும், இந்த இடத்திற்கும், பத்ரிநாத், கேதார்நாத் புனித ஸ்தலங்களை பார்வையிடுவதற்கும் வருமாறு முதலமைச்சர் ஜெயலலிதாவை உத்தரகண்ட் மாநில மக்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply