shadow

இலாகா இல்லாத முதல்வர் அறிவிப்புகளை வெளியிடலாமா? ஸ்டாலின் கேள்வி

cm-jayaதமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் முதல் சிகிச்சை எடுத்து வரும் நிலையில் அவர் வகித்து வந்த பொறுப்புகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் ஏற்றுக்கொண்டார். அவர் தற்போது இலாகா இல்லாத முதல்வராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 22-ம் தேதி முன்னோடித் திட்டம் ஒன்றை முதலமைச்சர் அறிவித்தார். மத்திய கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெயரில் கணக்கு தொடங்கப்பட்டு, கடன் வழங்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான உரம், விதை, உழவு இயந்திரங்கள் வாடகை, பயிர்க் காப்பீட்டுத் தொகை ஆகியவை பயிர்க்கடன் தொகையில் வரவு வைக்கப்படும்’ என்ற அறிவிப்பை முதல் வெளியிட்டிருந்தார்.

இலாகா இல்லாத முதல்வர் ஜெயலலிதா எப்படி இந்த அறிவிப்பை வெளியிடலாம் என்று தி.மு.க பொருளாளர் ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின், ராம்தாஸ் கருத்து குறித்து அ.தி.மு.கவின் தலைமைக் கழக பேச்சாளர் ஆவடி குமார் கூறியபோது, ‘இலாகா இல்லாத முதல்வர் என்று அவரைச் சொல்வதே அபத்தம். அவடைய பணிகள் வேறு ஒருவருக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இலாக்காக்கள் இன்னும் முதல்வரிடம்தான் இருக்கிறது.

நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கூட்டிய ஆய்வுக் கூட்டத்தின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில், எந்தவித சட்ட சிக்கலோ உண்மைக்கு மாறான தகவலோ இல்லை. தன் கடமையைத்தான் அமைச்சர் செய்திருக்கிறார். இன்றைக்கு இந்தியாவிலேயே இல்லாத விவசாயிகளுக்கான முன்னோடித் திட்டத்தை, முதலமைச்சர் அம்மா சட்டமன்றத்திலேயே அறிவித்திருந்தார். அதையொட்டி, அமைச்சருக்கு முதல்வர் கட்டளையிட்டிருக்கிறார். அதை அமைச்சர் நிறைவேற்றியிருக்கிறார்.

இதில் விதிமீறல் எங்கே வந்தது? இன்றைக்கும் தமிழ்நாடு அரசு, முதலமைச்சரின் ஆணைப்படிதான் இயங்குகிறது. அவருடைய அறிவுரையைப் பெற்றுத்தான் அமைச்சர்கள் இயங்குகின்றனர். காழ்ப்பு உணர்ச்சி கண்ணாடியை மாட்டிக் கொண்டு அரசு நிர்வாகத்தை பலவீனப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு நிர்வாகத் தெளிவற்ற அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின்” என்று கூறினார்.

Leave a Reply