shadow

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அபார வெற்றி. 11,144 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

narayanasamy_09378புதுச்சேரி முதல்வர் போட்டியிட்ட நெல்லித்தோப்பு தொகுதியில் முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த தொகுதியில் முதல்வர் நாராயணசாமிக்கும் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கும் நேரடி போட்டி இருந்தது.

இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டதும் முதல் சுற்றில் இருந்தே நாராயணசாமி முன்னிலை வகித்தார். சற்று முன் முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை 11,144 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நாராயணசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது, இந்த தொகுதியில் தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் 6,365 வாக்குகள் வாங்கினார் என்பதும் அதைவிட இந்த தேர்தலில் அவர் அதிகம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் விபரம்:

நாராயணசாமி(காங்கிரஸ்) – 18,709

ஓம்சக்தி சேகர்(அதிமுக) – 7,565

ரவி அண்ணாமலை (நாம் தமிழர்) – 90

Leave a Reply