shadow

முதல்வருடன் தலைமைச்செயலகம் செல்பவர் யார்?

தமிழக முதல்வர் ஓபிஎஸ் இன்று தலைமை செயலகம் செல்லவிருப்பதாக நேற்றே கூறிய நிலையில் இன்னும் சற்று நேரத்தில் அவர் தலைமைசெயலகத்திற்கு கிளம்ப உள்ளார். அவருடன் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் செல்லவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் தலைமைச்செயலகம் வரவுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் தலைமைச்செயலகம் செல்லவுள்ளதாகவும் அவருடன் துரைமுருகன் மற்றும் பொன்முடி ஆகியோர்களும் செல்லவுள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதல்வரும் எதிர்க்கட்சி தலைவர்களும், தலைமை செயலகத்தில் சந்திப்பார்களா? சந்தித்தால் என்ன பேசுவார்கள்? என்ற பரபரப்பில் ஒட்டுமொத்த தமிழகமும் உள்ளது.

Leave a Reply