shadow

நன்றி மறந்துவிட்டர் கமல்ஹாசன். முதல்வர் பழனிச்சாமி கண்டனம்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக பரபரப்பான அரசியல் கருத்துக்களை தனது டுவிட்டரில் தெரிவித்து வருகிறார். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவரது டுவிட்டர் பக்கங்கள் அதிரடியாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல், கடந்த தேர்தலில் பொதுமக்கள் வேறு ஒரு தலைமைக்குத்தான் ஓட்டு போட்டார்கள் என்றும், இன்று அவர் உயிருடன் இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஆணித்தரமான கருத்தை அந்த பேட்டியில் பதிவு செய்தார்

இந்த கருத்துக்கு ஏற்கனவே அமைச்சர் வைகைச்செல்வன் கண்டனம் தெரிவித்த நிலையில் நேற்று சேலத்தில் அரசு விழா ஒன்றில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் இந்த விழாவில் பேசியபோது, ‘ஆட்சி தொடரக்கூடாது என்று கூறும் கமல்ஹாசன் எந்த கிராமத்துக்காவது சென்று மக்களை சந்தித்திருப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் விஸ்வரூபம் படம் வெளியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவி செய்ததாகவும், அந்த நன்றியை கமல்ஹாசன் மறந்து விட்டு பேசுவதாகவும் கூறிய முதல்வர், 65 வயதுக்கு பிறகுதான் அவருக்கு ஞானோதயம் வந்துள்ளதாக கூறினார்.

Leave a Reply