கைசுத்தம் காப்போம்!

‘சுத்தம் சோறுபோடும்’ என்பது நம் பழமொழி. ஆனால், அசுத்தமான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 9-வது  இடம். `கைகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டாலே பெரும்பாலான  நோய்கள் அண்டாது’ என்கிறார்கள் மருத்துவர்கள். அசுத்தமான பொருட்களைத் தொடுவது, அழுக்கான இடங்களில் கையைவைப்பது, புழுதி படிந்த வாகனங்களைப் பயன்படுத்துவது, வெறும் கைகளால் மூக்கு சிந்துவது, கைகளால் முகத்தைத் தேய்ப்பது, தலையைக் கோதுவது, சுத்தம் செய்யப்படாத கீ போர்டு, செல்போனைப் பயன்படுத்துவது போன்றவற்றால் கைகள் அசுத்தமாகின்றன.

குழந்தைகள் மண்ணில்  விளையாடுவது,  கைக்குக் கிடைத்ததை எல்லாம் எடுப்பது போன்ற சேட்டைகளால் எளிதாகக் கைகளை அசுத்தமாக்கிக்கொள்வார்கள். ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் சாப்பிடும் முன்னரும், சாப்பிட்டு முடித்ததும் கண்டிப்பாக சோப்பால் கை கழுவ வேண்டும். ஆனால், இதை எல்லாம் யாரும் செய்வது இல்லை. சுத்தம் என்பது நமக்கு பேச்சு அளவில் மட்டுமே உள்ளது.

உண்மையில், சுத்தமாக இருக்க, ஒவ்வொரு நாளும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் கை கழுவுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். கை கழுவுவது என்றால் வெறுமனே குழாய் தண்ணீரில் கையை நீட்டிவிட்டு, பின்னர்  கையில் இருக்கும் ஈரத்தை சட்டை, பேன்ட்டில் துடைத்துக்கொண்டு செல்வது அல்ல. எப்படிக் கை கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்வதைக் கேட்போமா…

cleanclean1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *