shadow

11 தியேட்டர்களை விற்கவில்லை. வாடகைக்குத்தான் விட்டுள்ளோம். கிளாஸிக் மால் நிறுவனம் விளக்கம்
luxe
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில், ‘சென்னையில் உள்ள பீனிக்ஸ் மால் வளாகத்தில் உள்ள 11 லூக்ஸ் சினிமாஸ் என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை சசிகலா குடும்பத்தினர் ரூ.1000 கோடிக்கு வாங்கியதாக தெரிவித்திருந்தார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உரிமையாளர்களான கிளாஸிக் மால் டெவலப்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர் இதுகுறித்து விளக்கமளித்துள்ளனர்.

கிளாஸிக் மால் டெவலப்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி என்ற ஷாப்பிங் மால், மும்பையில் உள்ள கிளாஸிக் மால் டெவலப்மென்ட் கம்பெனி என்ற எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். இந்த மாலில் 11 திரையரங்குகள் கொண்ட மல்டி பிளக்ஸ் தியேட்டர் அமைக்க எங்கள் நிறுவனம் தமிழக அரசிடம் இருந்து படிவம் ‘N’ உரிமம் பெற்றுள்ளது. தியேட்டர்களை நடத்துவதற்காக ஜாஸ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்கு 1-2-2015 முதல் 14-12-2020 வரை வாடகைக்கு விட்டுள்ளோம். ஜாஸ் சினிமாஸ் நிறுவனமும் 1-2-2015 முதல், எங்களுக்கு மாத வாடகையை முறையாக செலுத்தி வருகிறது.

ஆனால், லூக்ஸ் சினிமாஸ் என்ற பெயரில் உள்ள 11 தியேட்டர்களை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் ரூ.1,000 கோடிக்கு வாங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. அவை உண்மைக்குப் புறம்பானவை. எங்களுக்கு சொந்தமான தியேட்டர்களை நாங்கள் யாருக்கும் விற்கவில்லை.

எங்களுக்கு சொந்தமான சொத்தில் ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் மாத வாடகை உரிமை அடிப்படையில் தியேட்டர்களை நடத்தி வருகிறது. செய்தித்தாள், ஊடகங்களில் காட்டப்படும் லூக்ஸ் சினி மாஸ் கட்டுமானங்கள் அனைத்தும் வாடகை பாத்தியம் முடியும் போது, எங்கள் கம்பெனிக்கு சொந்தமானவையே.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply