shadow

ootyதமிழகத்தின் முக்கிய சுற்றுலா ஸ்தலமாக விளங்கி வரும் ஊட்டியில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை திரைப்பட படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்று வரும் தேர்வுகள் விரைவில் முடிவடைய உள்ளதாலும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிக இருப்பதாலும், ஊட்டிக்கு அடுத்த மாதம் முதல் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல் இருப்பதற்காக ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களுக்கு ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகிய பகுதிகளில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் திரையுலகினர் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிராத்ஹு.

மேலும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்து தரப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply