shadow

 Belgian-Chocolates-006

நீண்டநாள் இளமையாக வைத்திருக்க உதவும் புதிய சாக்லெட்டை லண்டனில் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். சாக்லெட் அதிக கலோரி கொண்டது, அடிக்கடி சாப்பிடுவது நல்லதல்ல, உடல் எடை அதிகரிக்கும், பல்சொத்தை ஏற்படும்.. இப்படித்தான் சாக்லெட் குறித்து அறிந்துள்ளோம். ஆனால், சாக்லெட் தயாரிப்பில் சில புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி நம்மை இளமையாக வைத்திருக்க உதவும் புதிய சாக்லெட்டை தயாரித்திருக்கிறார்கள் லண்டன் ஆராய்ச்சியாளர்கள். இதுகுறித்து லண்டனில் உள்ள பயோடெக்னாலஜி நிறுவவனமான லைகோடெக் உரிமையாளர் டாக்டர் இவான் பெடியாவ் கூறியதாவது:

20140625172253-Belgian-chocolates

 மூப்பை தள்ளிபோடும் புதிய சாக்லெட்டுகளை உருவாக்கி உள்ளோம். இதற்காக சாக்லெட் தயாரிப்பில் சில பிரத்யேக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கோகோ சாக்லெட்டுடன் லைகோசோம் கலந்து இந்த சாக்லெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மூப்பை தள்ளிப்போடும் குணங்கள் அதிகம் உள்ளது. தினசரி இரண்டு பார்கள் என்ற கணக்கில் சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதன் பலன்களை நாமே உணர முடியும். சாக்லெட்டின் சுவையிலோ நிறத்திலோ எந்தவித மாற்றமும் இருக்காது. சாதாரண சாக்லெட் போலத்தான் இருக்கும். இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் எந்தவிதமான பாதிப்பும், பக்கவிளைவுகளும் இருக்காது. இறுதிக்கட்ட ஒப்புதலுக்குப்பின் விரைவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply