13துக்ளக் பத்திரிகை ஆசிரியரும் பிரபல அரசியல் விமர்சகருமான நடிகர் சோ, நேற்று உடல்நலம் குறைந்ததால் சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வரப்படுகிறது.

சோ என்று அழைக்கப்படும் சோ ராமசாமிக்கு தற்போது 79வயது ஆகிறது. நேற்று இரவு திடீரென அவர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதால் உறவினர்கள் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு மூச்சுத்திணறலுடன் வீசிங் பிரச்சனையும் இருப்பதாக கூறப்படுகிறது. சோ’வின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோவில் உடல்நிலை குறித்து கேள்விப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, அவரை நேரில் பார்க்க மருத்துவமனைக்கு வரயிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனை அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக சோவின் உடல்நிலை குறித்து போன் மூலம் முதல்வர் விவரம் கேட்டறிந்தார்.

.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *