ஆனால் நேரடி ஒளிபரப்பு உண்டு

மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்திரை திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்

இருப்பினும் மே 4ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சி வழக்கம்போல் நடைபெறும் என்றும் ஆனால் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கோவில் இணையதளம் மூலம் நேரடியாக இந்த திருமண நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்

மேலும் மே 4ஆம் தேதி காலை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும் போது பெண்கள் தங்கள் இல்லத்திலேயே புதிய மங்கள நாணை மாற்றவும் அவர் அறிவுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply