shadow

28a86de3-398b-4ccd-9dc5-6b1b09fa765a_S_secvpf

இரவில் ‘சிப்ஸ்‘ கொறித்துக் கொண்டும், ‘ஜோக்‘ அடித்துக் கொண்டும் டி.வி. நிகழ்ச்சிகளை பார்ப்பது ஆழ்ந்த தூக்கத்தை கெடுக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

கிரிக்கெட், கால்பந்து போட்டிகள் இரவு நேரத்தில் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பாகின்றன.

விளையாட்டு ரசிகர்கள் இரவு நேரத்தில் கண்விழித்து டி.வி. பார்ப்பது வழக்கம். அத்துடன் ‘சிப்ஸ்‘ போன்ற நொறுக்குத் தீனிகளை கொறிப்பதும், குளிர்பானங்கள் குடிப்பதும் வழக்கமாகி வருகிறது. இது இரவு நேர ஆழ்ந்த நித்திரையை கெடுக்கும்.

அடிக்கடி விழித்துக் கொள்வதும், தூக்கம் வராமல் புரள்வதும் நேரிடும். உறக்கத்தில் கனவு காணும் போது, கருவிழிகள் அசையும்.

இரவு நேரத்தில் கொறிப்பதால், கருவிழி அசைவு குறைவது ஆய்வில் தெரியவந்துள்ளது. சராசரியாக ஒரு நாளுக்கு ஆண் என்றால் 1600 கலோரியும், பெண் என்றால் 1400 கலோரியும் உணவு தேவை.

இதில் 25 சதவீதத்துக்கு குறைவாக கொழுப்புச்சத்து கொண்ட உணவாக இருக்க வேண்டும். ஆனால் 10 துண்டு ‘சிப்ஸ்‘ சாப்பிட்டால் அதில் 4 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது.

அதாவது 36 கலோரி சேருகிறது. தினமும் ஏராளமாக ‘சிப்ஸ்‘ சாப்பிடுவதால் சராசரியாக 40 கிராம் கொழுப்பும், 360 கலோரியும் உடலில் சேருகிறது.

இதனால் மொத்த கலோரி 2 ஆயிரமாக அதிகரிக்கிறது. நாள் முழுவதும் சாப்பிடும் உணவு கொழுப்புச்சத்து அதிகமாக இருந்தாலும், இரவில் ஆழ்ந்த உறக்கத்தை கெடுக்கும்.

இந்தியாவைப் பொருத்தவரை ஒருவரது உணவில் 45 சதவீதம் கொழுப்புச்சத்து உணவாகவே இருக்கிறது.

இதனுடன் இரவு நேரத்தில் கொறிப்பதால் கொழுப்புச்சத்து அதிகரித்து தூக்கத்தை கெடுக்கிறது.

ஒருவருக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூக்கம் தேவை. நல்ல தூக்கம் இல்லாததால் மறுநாள் பகல்பொழுதில் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. சிந்தனைத்திறன் குறைதல், கவனம் சிதறுதல், நினைவு மறதி, விபத்துக்கள் போன்றவை நிகழ்கின்றன.

இரவு உணவு முடிந்தபின் குறைந்தபட்சம் 3 மணி நேரத்துக்குப் பிறகே தூங்கச் செல்ல வேண்டும். இரவு நேரத்தில் காலம் தாழ்த்தி சாப்பிடுவதும், தூக்கம் விழிப்பதற்காக நொறுக்குத்தீனிகள் கொறிப்பதும் தூக்கத்தை கெடுக்கும்.

ஒருநாள் இரவின் நல்ல தூக்கம் 10 வேலை உணவு தரும் சக்தியையும், ஆரோக்கியத்தையும் தரும். அதனால் நல்ல இனிமையான ஆழ்ந்த உறக்கத்தை துரத்தும் சிப்ஸ்களை தவிர்ப்பது நல்லது.

Leave a Reply