shadow

9 மணி நேரத்தில் ரயில் நிலையம் அமைத்த சீன பொறியாளர்கள்

சீனா கட்டுமானத்துறையில் பல்வேறு சாதனைகல் செய்து வரும் நிலையில் அந்நாட்டில் உள்ள புஜியான் என்ற மாகாணத்தில் வெறும் 9 மணி நேரத்தில் புதிய ரயில் நிலையம் ஒன்றை கட்டி சாதனை செய்துள்ளனர்.

தென்கிழக்கு சீனா மற்றும் மத்திய சீனாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக கருதப்படும் புஜியான் மாநிலத்தின் லாங்காய் ரயில் நிலையத்தை அந்நாட்டு பொறியாளர்கள் வெறும் 9 மணி நேரத்தில் அமைத்தனர். 1500 ஊழியர்களையும் 7 பிரிவுகளாகப் பிரித்து இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

ஜனவரி 19ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பணிகள் 20ஆம் தேதி காலை முற்றிலும் முடிக்கப்பட்டது. சீன ரயில்வே துறை அந்த பொறியாளர் குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது

Leave a Reply