shadow

china-submarine-military-இலங்கை துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி கொடுத்திருக்கும் சம்பவம் இந்தியாவை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இலங்கை நாட்டின் கொழும்பு துறைமுகத்தில் ஏற்கனவே சீனாவின் 2 போர்க்கப்பல்களும், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றும் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் சீனாவின் மற்றொரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஒன்றை இலங்கை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அந்நாடு மீண்டும் அனுமதி அளித்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த  இந்த நீர்மூழ்கி கப்பல், விரைவில் இலங்கையில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என கடந்த வாரம் இந்தியா வந்திருந்த இலங்கை ராணுவ அமைச்சர் கோத்தபய ராஜபக்சே உறுதியளித்திருந்த நிலையில் சீனாவுக்கு நீர்மூழ்கி கப்பலை நிறுத்த அனுமதி கொடுத்து, இலங்கை இரட்டை வேடம் போடுவதாக மத்திய அரசு இலங்கைக்கு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

Leave a Reply