shadow

  iphone 3 ஹாங்காங்கில் இருந்து சீனாவிற்கு உடலின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைத்து 94 ஐபோன்களை கடத்தி செல்ல முயன்ற சீன வாலிபர் ஒருவர் பிடிபட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் ஐபோன்கள் தட்டுப்பாடு அதிகம் இருப்பதால் வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்து ஐபோன்களை வியாபாரம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஹாங்காங்கில் உள்ள விமான நிலையத்தில் ஒருவர் வித்தியாசமாக நடந்து சென்றதை பார்த்த விமான நிலைய காவல்துறையினர் அவரை விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணான பதில்களை கூறினார்.

எனவே அவரை தனியறைக்கு அழைத்து சென்று அவரை பரிசோதனை செய்தபோது அவரது உடலில் மொத்தம் 94 ஐபோன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சட்டவிரோதமாக ஹாங்காங்கில் இருந்து சீனாவிற்கு ஐபோன்களை கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

iphone 2

iphone 1

iphone

Leave a Reply