shadow

குளோனிங் குரங்குகள் தயார்! மனிதனை குளோனிங் செய்வது எப்போது?

ஒரு உயிரை போன்று மற்றொரு உயிரை உருவாக்கும் குளோனிங் முறைப்படி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் செம்மறி ஆடு உருவாக்கப்பட்ட நிலையில் தற்போது சீன விஞ்ஞானிகள் அதே குளோனிங் முறையில் இரண்டு குரங்குகளை உருவாக்கியுள்ளனர்.

மனிதனின் முன்னோடு என்று கூறப்படும் இந்த பாலூட்டி விலங்கான குரங்குக்கு மற்ற குரங்குக்கு இருப்பது போன்ற உடலின் பாகங்கள் அச்சு அசலாக உள்ளது.

6 வாரங்களுக்கு முன் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய இந்த குரங்குகளுக்கு சாங் சாங் மற்றும் ஹீயா ஹீயா என்ற பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. குரங்குகளை குளோனிங் முறையில் வெற்றிகரமாக உருவாக்கிவிட்டதால் இனி மனிதனையும் குளோனிங் செய்வது எளிது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்

Leave a Reply