shadow

99 iphones 1  99 iphonesசமீபத்தில் ஐபோன்6 உலகம் முழுவதும் வெளியானது என்பது அனைவரும் தெரிந்ததே. இந்நிலையில் ஒரே ஒரு ஐபோன் வாங்குவதற்கே பலர் யோசித்துக்கொண்டிருக்கையில் சீன இளைஞர் ஒருவர் தனது காதலிக்காக 99 ஐபோன் 6 மாடலை வாங்கியுள்ளார்.

சீனாவை சேர்ந்த Nanfang என்ற தான் காதலிக்கும் ஒரு பெண்ணை கவர்வதற்காக 99 ஐபோன் 6 போன்களை வாங்கி அவற்றை இதய வடிவத்தில் அடுக்கி அதன் நடுவில் நின்றுகொண்டு தனது காதலை அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால் அவருடைய காதலை அந்த பெண் ஏற்கவில்லை என்பதுதான் பெரிய சோகம்.

99 iphones 2

இந்த 99 ஐபோன்களின் மதிப்பு $80,000 ஆகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ.50 லட்சம் ஆகும். இந்த தொகை அந்த இளைஞரின் இரண்டு வருட சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அந்த பெண் தன்னுடைய காதலை ஏற்காததால் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளார் அந்த இளைஞர்.

இருப்பினும் சீனாவில் ஐபோன்6 மிகவும் டிமாண்டாக இருப்பதால் அவர் வாங்கிய ஐபோன்கள் அனைத்தும் உடனடியாக விற்பனையாகிவிட்டது. இருப்பினும் காதல் கைகூடாத சோகத்தில் இருக்கிறார் Nanfang

99 iphones

Leave a Reply