shadow

திருமணம் செய்ய பெண் கிடைக்காததால் ரோபோட்டை திருமணம் செய்த சீன வாலிபர்

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்றும், பெரியவர்கள் பார்த்தோ அல்லது கண்ணும் கண்ணும் கலந்த காதலில் விழுந்தோ நிகழும் ஒரு அற்புதமான உறவு, இந்த திருமணம் மனித வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்றாக உலகம் முழுவதும் இருக்கும் நிலையில் திருமணத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் சீனாவில் ஒரு இளைஞர் ரோபோட் எந்திரத்தை திருமணம் செய்துள்ளார்

சீனாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வரைமுறை இருந்ததால் இளைஞர்கள் திருமணம் செய்ய பெண்கள் கிடைப்பது எட்டாக்கனியாக இருந்தது.

இந்த நிலையில் செங் ஜியா ஜியா என்ற 31 வயது நபர் கடந்த சில ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் தேடியும் கிடைக்காததால் கடைசியில் வெறுத்து போய் ரோபோட்டை திருமணம் செய்து கொண்டார். அவரது பெற்றோரும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் இந்த திருமணம் உறவினர் சூழ நடந்தது.

இந்த ரோபோட்டின் எடை 30 கிலோ. இதனால் சில வார்த்தைகளை பேச முடியும். கேட்ட கேள்விகளுக்கு பதிலும் சொல்லும். ஆனாலும், தாம்பத்ய வாழ்க்கைக்கு தகுந்தபடி செயல்பட ரோபோட்டில் சில மாற்றங்களை செய்ய இருப்பதாக செங் ஜியா ஜியா கூறினார்.

Leave a Reply