ஓடும் ரயிலில் இருந்து பணத்தை வீசிய சீன நபர்! ஏன் தெரியுமா?

ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த 40 வயது சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து பணத்தை வீசி மக்களின் கவனத்தை பெற்று தன்னுடைய உயிரை காப்பாற்றியுள்ளார்

சீனாவை சேர்ந்த ஒருவர் ரயிலில் பயணம் செய்வதற்காக ரயிலில் ஏறி உட்கார்ந்திருந்தார். அப்போதுதான் ரயில் கிளம்ப ஆரம்பித்தது. அந்த சமயத்தில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவருடைய ரயில் பெட்டியில் யாரும் இல்லை. உதவிக்கு யாரை கூப்பிடுவது என்று தெரியவில்லை

இந்த நிலையில் திடீரென பணத்தை எடுத்து ஜன்னல் வழியாக வெளியே வீசினார். இதனை கண்ட ரயில்வே நிலையத்தில் இருந்தவர்கள் உடனடியாக ரயிலை நிறுத்த கோரினர். அதன்பின்னர் அவருக்கு உதவி கிடைத்தது. தந்து சமயோசிதத்தால் உயிரை காப்பாற்றிய அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *