shadow

மூன்றே மணி நேரத்தில் 2 மாடிகள் கொண்ட வீடு. சீனாவில் புதிய சாதனை

shadow

நம்மூரில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்றால் ஆறு மாதமோ அல்லது ஒரு வருடமோ ஆகும். அதுவும் இரண்டு மாடிகள் கொண்ட வீடு என்றால், சிலசமயம் ஒரு வருடத்திற்கும் மேல் ஆகும். தொழிலாளர் பற்றாக்குறை, வீடுகள் கட்ட தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை மற்றும் நிதிவசதி ஆகியவையே வீடுகள் கட்ட தாமதம் ஆவதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனாவில் மூன்றே மூன்று மணி நேரத்தில்  9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டாலும் பாதிக்காத வகையில் வலுவான இரண்டு மாடிகள் கொண்ட வீடு ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. இந்த வீட்டை காலையில் கட்ட ஆரம்பித்தனர். மாலையில் குடிவந்துவிட்டனர்.

சீனாவில் உள்ள சான்ஷி மாகாணத்தில் ஸியான் என்ற பகுதியில் ‘3டி பிரிண்டிங்’ தொழில் நுட்பத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று இரண்டு மாடி வீடு ஒன்றை மூன்றே மணி நேரத்தில் கட்டி முடித்துள்ளது. இந்த வீட்டிற்கான மாடல்கள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, அதி நவீன தொழில் நுட்ப முறையில் கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டை கட்டுவதற்கு சதுர மீட்டருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகியதாகக் கூறப்படுகிறது. வீட்டின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டு ‘கிரேன்’ மூலம் தூக்கி பொருத்தப்பட்டது. இந்த வீடு சமையலறை, படுக்கையறை, ஓய்வு அறை மற்றும் ஹால் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இது போன்ற வீடு கட்டுவதன் மூலம் போக்குவரத்து, ஆட்கள் கூலி, பொருட்கள் போன்றவற்றின் செலவு குறையும். கால நேரமும் மிச்சமாகும் என்பதால்  பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply