shadow

பூமிக்கு அடியில் 31 மாடி கட்டிடம்: சீன ரயில்வே சாதனை

பூமிக்கு அடியில் கார் பார்க்கிங் அல்லது ஒரு மாடி இரண்டு மாடி மட்டுமே கட்டப்பட்டு வருவதை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் சீனாவின் சாங்கிங் மாகாணத்தில் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையத்தில் பூமிக்கு அடியில் 94 மீட்டர் உயரத்தில் 31 அடிக்கு மாடிகள் கொண்ட ரெயில் நிலையம் கட்டப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சாலையில் இருந்து பூமிக்கு அடியில் ரெயில் நிலையம் செல்ல நகரும் படிக்கட்டு அமைக்கப்படவுள்ளதாகவும், அதன் மூலம் பூமிக்கு அடியில் உள்ள ரெயில்வே பிளாட்பாரங்களுக்கு மூன்றே நிமிடத்தில் செல்ல முடியும் என்றும் சீன ரயில்வே அரிவித்துள்ளது

இதன் மூலம் உலகில் உள்ள மிக ஆழமான மெட்ரோ ரெயில்களில் இதுவும் ஒன்று என்ற பெருமையை இது பெறுகிறது. தற்போது வடகொரியாவில் 110 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளது. இதுவே பூமிக்கு அடியில் உள்ள மிக ஆழமான மெட்ரோ நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

Leave a Reply