சீனாவில் மதுவில் வயாக்ராவை கலந்து விற்பனை. ரூ.70 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்

wine-pillஆண்களின் செக்ஸ் உணர்வை தூண்டும் விதமாக செயல்படும் வயாக்ரா மாத்திரையை மதுவில் கலந்து விற்பனை செய்ததாக பிரபல சீன தொழிற்சாலை ஒன்றில் அதிரடியாக ரெய்டு செய்யப்பட்டு, அந்த தொழிற்சாலையில் இருந்த ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள குயான்ஸி என்ற மாகாணத்தில் உள்ள குயிகுன் ஆல்கஹால் நிறுவனம் பலவிதமான மதுவகைகளை தயாரித்து வருகிறது. இவற்றில் 3 மது வகையான மதுவகைகளில் வயாக்ரா மாத்திரை கலப்படம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. எனவே இந்த மது வகைகளை அந்த நிறுவனம் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது.

இதுகுறித்து குயான்ஸி மாகாணத்தின் லியுஸ்கு நகர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டது. அதில் அவை உண்மை என தெரிய வந்தது. அதை தொடர்ந்து போலீசார் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 5,357 மது பாட்டில்கள் மற்றும் 1,124 கிலோ எடையுள்ள மது உற்பத்தி செய்யும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.70 லட்சம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *