shadow

இந்தியாவுக்கு சீனா மீண்டும் எச்சரிக்கை

சிக்கிம் எல்லையில் பூடானில் உள்ள டோல்காம் பகுதி தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இந்தியா ராணுவத்தை குவித்துள்ளது.

டோல்காம் தங்களுக்கு சொந்தம் என உரிமை கொண்டாடுகிறது. எனவே, அங்கிருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெறுமாறு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அதை இந்தியா காதில் வாங்கி கொள்ளாமல் மறுத்து விட்டது.

இந்த நிலையில் சீனா இந்தியாவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீன எல்லைக்குள் இந்தியா அத்து மீறி நுழைந்துள்ளது. எனவே அங்கிருந்து படைகளை உடனே வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்தியா-சீனாவுக்கு இடையே தற்போது நிலவும் எல்லை பிரச்சினை குறித்து சீனாவில் உள்ள வெளி நாடுகளின் தூதர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. டோல்காம் பகுதியில் சட்ட விரோதமாக இந்திய படைகள் நிறுத்தப்பட்டுள்ளன என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது உண்மையென்றால் தங்களுக்கு அது அதிர்ச்சி அளிக்கும் வி‌ஷயம் என அவர்கள் தெரிவித்ததாகவும் சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் லு காங் தெரிவித்துள்ளார். ஆனால் தங்கள் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நாடுகள் குறித்து தகவல் வெளியிடவில்லை.

இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இதுகுறித்து சீனா அளித்த விளக்க நிகழ்ச்சியில் தாங்கள் பங்கேற்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளன. ஆனால் ரஷிய தூதரிடம் சீனா தனியாக விளக்கம் அளித்துள்ளது தெரியவந் துள்ளது.

Leave a Reply