திபெத் புத்தமத தலைவர் தலாய்லாமாவை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தவுடன், இந்த சந்திப்பு நடந்தால் சீன – அமெரிக்க உறவுகள் பாதிக்கும் என சீனா எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் இன்று வெள்ளை மாளிகையில் தலாய்லாமாவை ஒபாமா சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது திபெத்தில் நடைபெறும் நிலைமைகளை கவனமாக கேட்டறிந்த ஒபாமா, திபெத்தில் மனித உரிமைகளை நிலைநாட்டவும், மத சுதந்திரத்தை காக்கவும் அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்று தலாய்லாமாவிடம் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பு காரணமாக சீனா, பீஜிங்கில் உள்ல அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பி ‘சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இது சீன அமெரிக்க பொருளாதார மற்றும் அரசியல் உறவை பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

 

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1jmKlUw” standard=”//www.youtube.com/v/SoSrDPK91lQ?fs=1″ vars=”ytid=SoSrDPK91lQ&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep7520″ /]

Leave a Reply