shadow

கோவா பிரிக்ஸ் மாநாடு. ரஷ்ய, சீன அதிபர்கள் வருகை

chinaகோவாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புதின் ஏற்கனவே இந்தியா வந்துவிட்ட நிலையில் சற்று முன்னர் சீன அதிபர் ஜீ ஜிங் பின் கோவா வந்தடைந்தார்.

கோவாவில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள 8வது பிரிக்ஸ் கூட்டத்தில்
பங்கேற்க ரஷ்யா, தென் ஆப்ரிககா, பிரேசில், சீன அதிபர்கள் இந்தியா வருகின்றனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை பிரிக்ஸ் மாநாடு நடக்கும் இடத்துக்கு வந்த ரஷ்ய அதிபர் புதின் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.

இந்நிலையில் சீன அதிபர் ஜீ ஜிங் பின் கோவா வந்தடைந்துள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply