shadow

ஆண்களை பலாத்காரம் செய்யும் பெண்களுக்கு 5 வருட சிறைத்தண்டனை. சீனாவில் புதிய சட்டம்
china
இந்தியா உள்பட பல நாடுகளில் பெண்கள் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதும், அதன் காரணங்களால் புகார் கொடுக்கப்பட்டு ஆண்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு வருவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீனாவில் முதன்முதலாக ஆண்களும் பெண்கள் மீது பலாத்கார வழக்கு தொடுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சீனாவில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டு வருவது குறித்து
சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய சட்டத்தின் படி ஆண் அல்லது பெண் இருவரில் யார் பாலியல் குற்றங்களில் ஈடுப்பட்டாலும் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்கிறது.

இதுவரை சீனாவில் பின்பற்றப்பட்டு வந்த சட்டத்தின்படி ஆண்கள் பாலியல் பலாத்கார வழக்கு தொடர முடியாத சூழ்நிலை இருந்தது. அப்படி வழக்கு தொடர விரும்பினாலும் வேறு பிரிவுகளின் கீழ்தான் வழக்கு பதிவு செய்ய முடியும். இதனால் ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பெண்கள் இதுவரை தப்பித்து வந்தனர். ஆனால் இனிமேல் இந்த புதிய சட்டத்தின்படி அவர்களுக்கும் தண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply