shadow

bc3a1118-337a-43dc-9f02-d3b347ae7064_S_secvpf

நிறைய பேருக்கு எப்போதும் சூயிங் கம்மை மெல்லும் பழக்கம் இருக்கும். அப்படி சூயிங்கம் மெல்லும் பழக்கத்தினால் நிறைய ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். அதில் மூட்டு வலிகள், தலை வலி, வயிற்றுப்போக்கு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஜங்க் உணவுகளை உண்ணத் தூண்டும் ஆய்வுகளில் சூயிங் கம் மெல்லுவதால், அதிலும் புதினா சுவை கொண்ட சூயிங் கம்மை மெல்லுவதால், ஆரோக்கியமான உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடும் அளவு குறைவதாக தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி, சூயிங் கம் ஜங்க் உணவுகளின் மீது நாட்டத்தை அதிகப்படுத்திவிடுமாம்.

மூட்டு வலிகளை ஏற்படுத்தும் வாயில் உள்ள தசைகளுக்கு அளவுக்கு அதிகமாக வேலை கொடுத்தால், அதனால் மூட்டுகளில் பிரச்சனைகள் அதிகமாகும். அதிலும் சூயிங் கம்மை தொடர்ந்து மென்றவாறு இருந்தால், அதனால் தாடையை மண்டையுடன் இணைக்கும் மூட்டுகள் மற்றும் தசைகளில் கடுமையான வலியை ஏற்படுத்தும்.

தலைவலி சூயிங் கம் மெல்லும் பழக்கம் உள்ளவர்களுக்கு அடிக்கடி கடுமையான தலை வலி ஏற்படக்கூடும். இதற்கு அதில் உள்ள பதப்படுத்தும் பொருள், செயற்கை சுவையூட்டிகள் போன்றவை தான் காரணம். பற்களை பாதிக்கும் சூயிங் கம் மெல்லுவது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நல்லது தான் என்றாலும், அளவுக்கு அதிகமாகும் போது, அதுவே பற்கள் மற்றும் ஈறுகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

இதற்கு அதில் உள்ள சர்க்கரை படலம் தான் காரணம். அந்த சர்க்கரையானது வாயில் உள்ள பாக்டீரியாக்களுக்கு நல்ல உணவாக அமைந்து, அதனால் அந்த பாக்டீரியாக்கள் பற்கள் மற்றும் ஈறுகளை தாக்குகிறது.

சூயிங் கம் மெல்லும் பழக்கம் உள்ளவர்களுக்கு, அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும். சூயிங் கம்மை அளவுக்கு அதிகமாக மெல்லுவதால், பற்களில் உள்ள மெர்குரி வெளிப்பட்டு, உடலினுள் சென்று, மோசமான விஷமான மாறி, நாளடைவில் அதுவே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

Leave a Reply