தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம்(தோல் உரித்தது ) – 1/2 கப்
பூண்டு (தோல் உரித்தது) – 10 பல்
புளி (சிறிய எலுமிச்சை அளவு )
சாம்பார் தூள்(குழம்பு மிளகாய்த்தூள் ) – 2-3 தேக்கரண்டி
தக்காளி – 2(பொடியாக நறுக்கியது )
வெங்காய கறி வடகம் – 1/4கப்

தாளிக்க
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
சோம்பு – 1/4 தேக்கரண்டி

செய்முறை

  •     புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
  •     ஒரு பாத்திரத்தில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி வெந்தயம், சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
  •     இதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  •     தக்காளி வதங்கியவுடன் சாம்பார் தூள் அல்லது குழம்பு தூள் சேர்த்து வதக்கி, புளி கரைசலை சேர்க்கவும்.
  •     இதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும்.
  •     ஒரு சிறு பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான அளவு என்னை ஊற்றி வெங்காய கறி வடகத்தை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  •     பொரித்த வடகத்தை குழம்பில் சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் குழம்பை இறக்கவும்.
  •     செட்டிநாடு புளிக்குழம்பு இட்லி, தோசை, சாதம் அனைத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *