shadow

48

சென்னை வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் தாகூர் மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி பி.ஸ்வர்ணமாலாவுக்கு, ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் இலவச சேர்க்கைக்கான அனுமதி உத்தரவு வழங்கப்பட்டது.
 தாகூர் கல்விக் குழும நிறுவனங்கள், தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. 10, 12, 14, 17 ஆகிய வயதுப் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 இலவச சேர்க்கை: 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மீனம்பாக்கம் கேந்த்ரிய வித்யாலயா பள்ளி மாணவி பி.ஸ்வர்ணமாலாவுக்கு தாகூர் கல்விக் குழுமத் தலைவர் பேராசிரியர் எம்.மாலா, சிறப்புப் பரிசாக பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் இலவச சேர்க்கை வழங்குவதாக அறிவித்தார்.
 சர்வதேச செஸ் போட்டி நடத்துநர் வி.காமேஸ்வரன் சேர்க்கைக்கான அனுமதி உத்தரவை மாணவி பி.சுவர்ணமாலாவுக்கு வழங்கினார். தாகூர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.சாந்தா, தாகூர் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் கே.சாந்தி, ஜெருசலேம் பொறியியல் கல்லூரி முதல்வர் ராமலிங்கம், உடற்கல்வி ஆசிரியர்கள் பி.நடராஜன், ரஜினிகாந்த், அசோக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply