Chennai Today News

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணி மீண்டும் சாம்பியன்

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணி மீண்டும் சாம்பியன்

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெங்களூர் அணியை சென்னை அணி 3-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் சென்னை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே சென்னையின் எப்சி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர்.

போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் பெங்களூரு அணியின் சுனில் சேத்ரி முதல் கோலை அடித்தாலும் 20-வது நிமிடத்தில் சென்னை அணியின் மைல்சன் ஆல்வ்ஸ் ஒரு கோல் அடித்து அதை சமன் படுத்தினார்.

இந்த நிலையில் மைல்சன் ஆல்வ்ஸ் ஒரு கோலை 48-வது நிமிடத்தில் அடித்ததால் முதல் பாதியில் சென்னை அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2வது பாதியில் சென்னை மற்றும் பெங்களூரு அணி தலா ஒரு கோல் அடித்தததால் சென்னையின் எஃப்சி அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!