ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி. சாம்பியன் பட்டத்தை பெறுவது யார்? நாளை சென்னை-கோவா பலப்பரிட்சை
isl
கடந்த அக்டோபர் மாதம் 3–ந்தேதி தொடங்கிய இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டியின் பரபரப்பான 14 ‘லீக்’ போட்டிகள் முடிவடைந்து அரையிறுதி போட்டியும் முடிந்துவிட்டது. நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? என்பது தெரியவரும். இந்த இறுதி போட்டியில் சென்னை மற்றும் கோவா அணிகள் மோதவுள்ளது

இரு அணிகளும் முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள நிலையில் சென்னையின் எப்.சி அணி கோவாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். சென்னை அணியில் அதிக கோல்கள் அடித்த வீரராக மென்டோசா நம்பிக்கைக்குரிய வீரராக உள்ளார். கொலம்பியாவை சேர்ந்த இவர் 15 ஆட்டத்தில் 12 கோல்கள் அடித்துள்ளார். இதுதவிர எலனோ (பிரேசில்), மென்டி (பிரான்ஸ்), ஜேஜி போன்ற முன்னணி வீரர்களும் சென்னை அணியில் உள்ளனர். கோவாவில் நடந்த ‘லீக்’ ஆட்டத்தில் சென்னை அணி 4–0 என்ற கணக்கில் அந்த அணியை வீழ்த்தி இருந்ததால் சென்னை அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

அதே நேரத்தில் கோவா அணியும் பலம் பொருந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது.  சென்னையில் நடந்த ‘லீக்’ ஆட்டத்தில் 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இருந்தது. பிரேசிலை சேர்ந்த ரெயினால்டோ அதிக கோல்கள் அடித்த கோவா அணி வீரராக உள்ளார். அவர் 7 கோல்கள் அடித்துள்ளார். இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் நாளைய இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *