shadow

kushbooகடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் நடிகை குஷ்பூ அதை மறுத்துள்ளார்.

திமுகவின் முக்கிய பேச்சாளராக விளங்கிய  நடிகை குஷ்பு, கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது சீட் கேட்டபோது, திமுக தலைமை அவருக்கு சீட் கொடுக்க மறுத்தது. இருப்பினும் அந்த ஏமாற்றத்தை பொறுத்துக்கொண்டு திமுக வேட்பாளர்களுக்காக புயல்வேக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  குறுகிய காலத்தில் அக்கட்சியின் முன்னணி பிரசார பிரமுகராக வலம் வந்த அவருக்கு திமுக தலைவருக்கு நெருக்கமான ஒருசிலரால் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் கடந்த ஜூன் மாதம் அக்கட்சியிலிருந்து குஷ்பு திடீரென விலகினார்.

இந்நிலையில் குஷ்பூ பாஜகவில் இணையப் போவதாகவும், தன்னை கட்சியில் இருந்து துரத்திய திமுகவின் முக்கிய தலைவரை பழிவாங்க உள்ளதாகவும் சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாயின.

ஆனால் இதனை குஷ்பூ மறுத்துள்ளார். தனது  ட்விட்டர் பக்கத்தில்  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பாஜகவில் நான் இணைவதாகச்  சொல்லப்படுவதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply