shadow

ajithதல அஜீத்துக்கு இந்த வருடம் மிகவும் ராசியான வருடம் என்று கூறினால் மிகையாகாது. ‘என்னை அறிந்தால்’ என்ற சூப்பர் ஹிட் படமும், குட்டித்தல’ வரவும் அவரை உயரந்த இடத்தில் நிறுத்தியுள்ளது. இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் டைம்ஸ் ஆப் இந்தியா’ அஜீத்துக்கு சிறப்பு விருது ஒன்று கொடுத்து கெளரவித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டின் மிகவும் விரும்பத்தக்க நடிகர்’ என்ற விருதுக்கு அஜீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் கோலிவுட் நடிகர்களில் பெரும்பாலானோர் இந்த போட்டியில் இருந்தனர். ஆனால் அஜீத் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.

அஜீத்துக்கு அடுத்த இடங்களை சூர்யா, தனுஷ், விக்ரம் மற்றும் ஆர்யா ஆகியோர் பிடித்துள்ளனர். அஜீத்தின் போட்டியாளர் என்று கருதப்படும் இளைய தளபதி விஜய்க்கு இந்த பட்டியலில் 8வது இடமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டைம்ஸ் ஆப் இந்தியாவின் முதல்வர் விருது பெற்ற அஜீத்துக்கு சென்னை டுடே நியூஸ்.காம் சார்பில் வாழ்த்துக்கள்.

2014ஆம் ஆண்டின் 25 மிகவும் விரும்பத்தக்க நடிகர்களின் முழு பட்டியல் வருமாறு:

1. அஜீத்
2. சூர்யா
3. தனுஷ்
4. விக்ரம்
5, ஆர்யா
6. அதர்வா
7. துல்கார் சல்மான்
8. விஜய்
9. வித்யூத் ஜம்வால்
10. விஜய் சேதுபதி
11. சிம்பு
12. அர்மான் இப்ராஹிம்
13. அமிதேஷ் ப்ரதான்
14. சித்தார்த்
15. அனிருத்
16. கார்த்தி
17. சிவகார்த்திகேயன்
18. ஜீவா
19. விஷால்
20. மாதவன்
21. அஸ்வின் காகுமானு
22. விக்ரம் பிரபு
23. அசோக் செல்வன்
24. கவுதம் கார்த்திக்
25. பரத் ராஜ்

Leave a Reply