சென்னை: தீபாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு இன்று இரவு வரை 4,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தீபாவளியை ஒட்டி ஊருக்கு சென்ற அனைவருக்குமே ஒரே நேரத்தில் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை. எனவே பயணிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் நேற்று முதல் நாளை வரை சென்னை அரசு சார்பில் 4,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதே போன்று சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சொந்த ஊருக்கு சென்று உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாடியவர்கள் இன்று முதல் பணிக்கு திரும்புகின்றனர். பயணிகளின் வசதிக்காக சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள், சிறப்பு தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு திரும்பவும் 8,350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்படி கடந்த 29&ம் தேதி முதல் நவம்பர் 1&ம் தேதி வரை சென்னையில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களுக்கு 4,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

எஞ்சிய 4,050 பேருந்துகள் பல்«று மாவட்டங்களில் இருந்து இயக்கப்பட்டன. சிறப்பு பேருந்துகளில் 2லட்சத்திற்கு மேற்பட்டோர் ஆண்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply