shadow

தியேட்டர்கள் இயங்காது: சங்கம், வழக்கம்போல் செயல்படும்: அபிராமி ராமநாதன்

இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கமும், சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளும் வழக்கம்போல் செயல்படும் என அபிராமி ராமநாதன் அவர்களும் அறிவித்துள்ளதால் சினிமா ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்பட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மார்ச் 16 முதல் மூடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் இந்த அறிவிப்புக்கு சென்னையில் உள்ள ஒருசில திரையரங்க உரிமையளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் அரங்க உரிமையாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை

இதன் காரணமாக சென்னையில் மட்டும் வழக்கம்போல் திரையரங்குகள் இயங்கும் என்றும் தமிழ் உள்பட மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், போஜ்புரி ஆகிய மொழி திரைப்படங்கள் திரையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

Leave a Reply