shadow

14

ஐ.பி.எல் 7 போட்டிகளில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மொகாலி அணி மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார். 20 ஓவர்களில் சென்னை அணி 205 ரன்கள் குவித்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மித் மற்றும் மெக்கல்லம் முறையே66 மற்றும் 67 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டிய மொகாலி அணி, தொடக்கத்தில் சிறிது தடுமாறினாலும், அடுத்து மாக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தினால் 18.5 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மாக்ஸ்வெல் 43 பந்துகளில் 95 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

ஸ்கோர் விபரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ்  205/4  20 ஓவர்கள்

ஸ்மித்        66
மெக்கல்லம்    67
சுரேஷ் ரெய்னா    24
தோனி        26
பிராவோ        8

உதிரிகள்        14

மொத்தம்        205/4

மொகாலி அணி: 206/4 18.5 ஓவர்கள்

புஜாரா        13
சேவாக்        19
மாக்ஸ்வெல்    95
பட்டேல்        2
மில்லெர்        54
பெய்லி        17

உதிரிகள்     6

மொத்தம்        206/4

Leave a Reply