championதற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள சேம்பியன் லீக் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றைய போட்டி ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. சென்னை அணியை எதிர்த்து விளையாடிய டால்பின் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் டால்பின் அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்தது.  இதனால் பேட்டிங் களத்தில் முதலில் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில்  242 ரன்கள் குவித்தது. சுரேஷ் ரெய்னா 90 ரன்களும், மெக்கல்லம் 49 ரன்களும், ஜடேஜா 40 ரன்களும், எடுத்தனர். ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே அவுட் ஆகி சென்னை அணி கேப்டன் தோனி அதிர்ச்சி கொடுத்தார்.

சென்னை அணி கொடுத்த பிரமாண்ட இலக்கான 243 ரன்களை எடுக்க களமிறங்கிய டால்பின் அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டால்பின் அணியால் 20 ஓவர்களில் 188 ரன்களே எடுக்க முடிந்தது. ஷர்மா 4 விக்கெட்டுக்களையும் நெஹ்ரா, பிராவோ தலா இரண்டு விக்கெட்டுக்களையும் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை 90 ரன்கள் எடுத்த சுரேஷ் ரெய்னா பெற்றார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *