மீண்டும் சாம்பியன் ஆனது சென்னை சூப்பர் கிங்ஸ்: வாட்சன் அபாரம்

இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதி போட்டியில் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சாம்பியன் பட்டம் வென்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை சென்னை அணி தேர்வு செய்ததால் ஐதராபாத் அணி முதலில் களமிறங்கி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 178 ரன்கள் எடுத்தது. சாம்பியன் பட்டத்தை வெல்ல 179 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 181 ரன்கள் குவித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த போட்டியின் ஸ்கோர் விபரம்:

ஐதராபாத் அணி: 178/6 20 ஓவர்கள்

வில்லியம்சன்: 47
யூசுப் பதான்: 45

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: 181/2 18.3 ஓவர்கள்

ஷேன் வாட்சன்: 117
சுரேஷ் ரெய்னா: 32

ஆட்டநாயகன்: வாட்சன்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *