சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டத் டென்னிஸ் மைதானத்தில் இன்று சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்குகிறது. இதில் உலகின் பலநாடுகளில் இருந்து வந்துள்ள முன்னணி வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். இந்த போட்டிக்காக தமிழக அரசு ரூ.2கோடி நிதியளித்துள்ளது. இன்று மாலை 5 மணிக்கு முதல்போட்டி தொடங்குகிறது.

இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த சோம்தேவ் தேவ்வர்மன், யுகி பாம்ப்ரி, ஜீவன் நெடுஞ்செழியன் ஆகிய மூன்று வீர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.2 கோடியே 78லட்சம் ஆகும். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.45 லட்சமும், இரண்டாவது இடம் பெறுபவருக்கு ரூ.23.64 லட்சமும் பரிசு கிடைக்கும்.

இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவர்களுக்கு ரூ.13.5 லட்சமும், இரண்டாம் இடம் பெறும் ஜோடிக்கு 7.17 லட்சம் பரிசும் வழங்கப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றவர்களின் விபரங்கள்:

ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றவர்கள்
2013 செர்பியா வீரர் ஜான்கோ டிப்சரேவிச்
2012 கனடா வீரர்  மில்ஸ் ரயோனிக்
2011 ஸ்விட்சர்லாந்து வீரர்  வாவ்ரிங்கா
2010 குரேஷியா வீரர்  மரின் சிலிச்
2009 குரேஷியா வீரர்  மரின் சிலிச்

இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றவர்கள்
2013  ஃபிரான்ஸ்/ஸ்விட்சர்லாந்து வீரர்கள் பெனாய்ட்/வாவ்ரிங்கா
2012  இந்தியா/செர்பியா வீரர்கள்  பயஸ்/ டிப்சரேவிச்
2011  இந்தியா  வீரர்கள் மகேஷ் பூபதி/லியாண்டர் பயஸ்
2010  ஸ்பெயின் வீரர்கள் மார்செல் கிரானோலர்ஸ்/ சான்டியாகோ வென்டுரா
2009  அமெரிக்கா வீரர்கள்  எரிக் புடோராக்/ ராஜீவ் ராம்

Leave a Reply