shadow

chennaiMetroRail1சென்னையில் முதல்கட்டமாக மெட்ரோ ரயில் பயண திட்டம் இரண்டு வழித்தடங்களில் விறுவிறுப்பாக வேலை நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பயண திட்டம் விரைவில் தொடங்கவுள்ளது.

இரண்டாவது மெட்ரோ ரயில் திட்டம் மூன்று வழித்தடங்களில் தொடங்கப்படவுள்ளன. மாதவரம்- கலங்கரை விளக்கம், கோயம்பேடு- ஈஞ்சம்பாக்கம், மாதவரம்- பெரும்பாக்கம்  ஆகிய மூன்று வழித்தடங்களில் சுமார் 76 கிலோமீட்டர் நீள பாதையில் அமைக்கப்பட உள்ளது. இந்த பாதையின் 90 சதவீதம் சுரங்கப்பாதையாக இருக்கும் என கூறப்படுகிறது.

முதல்வழித்தடம் மாதவரம் – கலங்கரை விளக்கம்: இந்த வழித்தடம் 17 கிமி தூரத்துக்கு அமைக்கப்படும். இந்த வழித்தடத்திற்கான செலவு சுமார் ரூ.8,075 கோடி ஆகும். இந்த வழித்தடம், பெரம்பூர், அயனாவரம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, அண்ணா மேம்பாலம் (ஜெமினி), ராதாகிருஷ்ணன் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் வழியாகச் செல்லும்.

இரண்டாவது வழித்தடம் கோயம்பேடு – ஈஞ்சம்பாக்கம்: இந்த இரண்டாவது வழித்தடம் 27 கிமீர் தூரத்துக்கு ரூ.12,825 கோடி செலவில் அமைக்கப்படும். இந்த வழித்தடம், சாலிகிராமம், வடபழனி, கோடம்பாக்கம், பனகல் பார்க், வெங்கட் நாராயணா ரோடு, நந்தனம், ஆழ்வார்பேட்டை டி.டி.கே. ரோடு, லஸ் சர்ச் ரோடு, ஆர்.கே. மடம் சாலை, மந்தைவெளி, அடையாறு, பெசன்ட்நகர், திருவான்மியூர் (பஸ் நிலையம் அருகே), கொட்டிவாக்கம் வழியாகச் செல்கிறது.  

மூன்றாவது வழித்தடம் மாதவரம் -பெரும்பாக்கம்: இந்த மூன்றாவது வழித்தடம் 32 கிமீ தூரத்துக்கு ரூ.15,200 கோடியில் அமைக்கப்படும். இந்த வழித்தடம், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர் மேற்கு, முகப்பேர், மதுரவாயல், வளசரவாக்கம், சென்னை வர்த்தக மையம் (நந்தம்பாக்கம்), ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் (ஓ.டி.ஏ.), ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம் வழியாகச் செல்லும்.

இந்த முன்று வழித்தடத்திற்கு சேர்த்து ரூ.36,100 கோடி செலவாகும் என்றும் பிரதமர் மோடியிடம் ஜெயலலிதா நேரில் வலியுறுத்தியபோது அதற்கு பிரதமர் ஒப்புக்கொண்டதாகவும், அதனால் இரண்டவது கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் அடுத்த ஆண்டில் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply