shadow

chennai-metro-railசென்னை எழும்பூர் – திருமங்கலம் பகுதியில் நடைபெற்று வரும் சுரங்க மெட்ரோ ரயில் பணிகள் வரும் 2015 ஆண்டு டிசம்பரில் முடிவடையும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளனர்.

எழும்பூர் -திருமங்கலம் சுரங்க மெட்ரோ ரயில் பாதை வேலைகள் வரும் 2015 டிசம்பரில் நிறைவடையும் என்றும் 45கிமீ தூரத்திற்கான சென்னை மெட்ரோ ரயில் பணிகள் 2016 ஆகஸ்ட் முதல் செயல்பட தொடங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 9.5 கிமீ தூரமுள்ள எழும்பூர்-திருமங்கலம் இடையேயான சுரங்க மெட்ரோ கட்டுமானப்பணிகள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 2014 டிசம்பரில் முடிந்து விடும். “சுரங்கப்பாதை வேலைகளை இன்னும் 4 மாதங்களில் முடிந்துவிடும். ஆனால் அதன் பின்னர் பாலமிடும் பணிகள், மின்மயமாக்கப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற ஒருவருட காலம் ஆகும் என்பது முழுப்பணிகளும் 2015 டிசம்பரில் முடிவடையும் என்று கூறிய அதிகாரிகள் , சென்னை மெட்ரோ ரயில் பணிகள் முழுவதும் முடிவடைந்து 2016 ஆகஸ்ட் மாதத்தில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்ற்ம் கூறினார்.

நேரு பூங்கா முதல் எழும்பூர் வரையில் 948 மீட்டர்களுக்கு இரண்டு எந்திரங்கள் மூலம் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஒரு கிமீ சுரங்கப்பாதை அமைக்க ரூ.300 கோடியும், ஒரு சுரங்க ரயில் நிலையம் அமைக்க ரூ.100 கோடியும் செலவாகிறது என அதிகாரிகள் கூறியுள்ளனர்

Leave a Reply