shadow

பாடகர் கோவன் கைது வழக்கில் நீதிபதிகள் அதிரடி உத்தரவு
kovan
முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மோடி ஆகியோர்களை தாக்கி பாடல் ஒன்றை பாடியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட பாடகர் கோவனை விடுவிக்க கோரிய ஆட்கொணர்வு மனுவை இன்று சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேசத்துரோக வழக்கில் சமீபத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் கோவனின் நண்பர் வெங்கடேசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘கோவன் கைது நடவடிக்கையில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவரை சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், அவரை உடனே விடுதலை செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி ஆர்.சுதாகர், பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘கோவன் கைது சம்பவத்தில் போலீசார் சட்டப்படி நடந்துள்ளதாகவும் சட்டப்படி வழக்குப்பதிவு செய்து, முறையாக கைது செய்துள்ளனதாகவும் இதில் விதிமீறல் எதுவும் இல்லை’ என்றும் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘கைது நடவடிக்கையில் விதிமீறல் எதுவும் இல்லை என்பதால், மனுவை தள்ளுபடி செய்கிறோம். கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் கோரி சம்பந்தப்பட்ட கோர்ட்டை மனுதாரர் அணுகலாம்’ என்று தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.

Leave a Reply