shadow

2011-ல் ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2011ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சைதை துரைச்சாமி, ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டியில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பின்படி 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

2011ஆம் ஆண்டு தேர்தல் முடிவடைந்து, 2016ஆம் ஆண்டு தேர்தலும் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த தீர்ப்பில் ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவித்திருந்தாலும் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது. காலங்கடந்த தீர்ப்பு என்று டுவிட்டரில் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply